ஆள்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் தரையிறக்கப்பட்ட தனியார் விமானம் இன்று 303 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்துள்ளது.
அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு 303 இந்தியர்கள் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பிரான்ஸ் போலீசார் தனியார் விமானம் ஒன்றை சில நாட்களுக்கு முன் தரையிறக்கி அந்த விமானத்திற்குள் சோதனை நடத்தினர்.
ஐரோப்பிய நாடான ருமேனியாவைச் சேர்ந்த, ‘லெஜண்ட் ஏர்லைன்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் இயக்கும் இந்த ,விமானத்திற்குள் சோதனை நடத்திய பிரான்ஸ் போலீசார் அதில் இருந்த பயணிகளில் இருவரை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தினர் . இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த சந்தேகத்திற்கு இடமான 40 பயணிகள் முறையான ஆவணமின்றி புகலிடம் கோரி மத்திய அமெரிக்காவிற்கு செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் சுமார் 250 பேர் 4 நாட்களுக்கு பிறகு பிரான்ஸ் அருகே உள்ள வாத்ரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மும்பை வந்தடைந்துள்ளனர் .