சென்னையில் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
45 வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரி 6ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 45-வது சென்னை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது என்றும் இந்த கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்காட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்த அவர்கள் மேலும் கடந்த வருடம் போன்றே 800 அரங்குகள் அமைத்து இந்த புத்தக காட்சி நடைபெறும் எனவும், நுழைவு கட்டணம் பொறுத்தவரை பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளனர்.