உலகின் மிகவும் வயதான நபரான (oldest person) பிரெஞ்சு கன்னியாஸ்திரி காலமானார்.
உலகின் மிகவும் வயதான நபரான (oldest person) பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் இன்று காலமானார். அவருக்கு வயதுவயது (118).
லூசில் ராண்டன் முதல் உலகப் போரின் போது, பிப்ரவரி 11, 1904 அன்று தெற்கு பிரான்சில் பிறந்தார். லூசில் ராண்டன், “சகோதரி ஆண்ட்ரே” என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
மேலும், நியூயார்க் தனது முதல் சுரங்கப்பாதையைத் திறந்த ஆண்டில் ரேண்டன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லூசில் ராண்டன் முதியோர் இல்லத்தில் இருந்த போது, தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு 119 வயதான ஜப்பானின் “கேன் தனகா” இறப்பதற்கு முன்பு, “சகோதரி ஆண்ட்ரே” மிகவும் வயதான ஐரோப்பியர் என்று அழைக்கப்பட்டார்.
மேலும், உலகின் மிகவும் வயதான பிரெஞ்சு கன்னியாஸ்திரி என கின்னஸ் உலக சாதனைகள் ஏப்ரல் 2022 இல் அவரது நிலையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.