மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சமூக நீதிக்காக ஆற்றிய தொண்டுகள் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்களில் கொண்டு வரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி (Minister Ponmudi)தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா சமூக நீதிக் காவலர் – கலைஞர் குழுவின் ஆலோசனைக்கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி:
கருணாநிதி சமூக நீதிக்காக ஆற்றிய பங்கை மாணவர்களிடம் கொண்டும் செல்லும் வகையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இட ஓதுக்கீட்டுக்காக அரும்பாடுபட்டு அடித்தளமிட்டவர் கருணாநிதி எனவும் கூறினார்.
மேலும், கருணாநிதி சமூக நீதிக்காக ஆற்றிய தொண்டுகள் பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என கூறிய அவர், கருணாநிதி சமூக நீதிக்காக அனைத்துக் கல்லூரிகளிலும் பேச்சுப் போட்டி கட்டுரைப்போட்டி நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.