சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார்.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள வீட்டில் இன்று சமையல் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தினால் அருகில் இருந்த 5 வீடுகள் தரைமட்டமானது.
அத்துடன் இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் 7 க்கும் மேற்பட்டோர் விபத்து பகுதியில் சிக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கபட்டுள்ளனர்.