வெங்காயம் கூட்டத்திலும் இல்லை, பின்னணி பேனரிலும் இல்லை. வெங்காயம் ரோஸ்டா, வெங்காயம் வெட்டப்பட்டதா,என அண்ணாமலையை காயத்ரி ரகுராம்(gayathri raghuram) விமர்சித்துள்ளது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும்முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள அண்ணாமலை தமிழகம் திரும்பிவிட்டார். அவர் தலைமையில்தான் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் அண்ணாமலை இல்லாமலேயே கூட்டம் தொடங்கப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் முன்பே கூட்டம் தொடங்கபட்டதற்கு பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
வெங்காயம் கூட்டத்திலும் இல்லை, பின்னணி பேனரிலும் இல்லை. வெங்காயம் ரோஸ்டா, வெங்காயம் வெட்டப்பட்டதா, அல்லது வெங்காயம் உரிக்கப்பட்டதா?
வெங்காயத்தைப் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். ஆனால் குளோபல் மருத்துவமனை அங்கு இருந்து மருத்துவர் சான்றிதழை சுகாதார அறிக்கையில் கூறப்பட்ட நுரையீரல் இருமல் சுவாச பிரச்சனை நோயாளி அண்ணாமலை, BJP கூட்டத்தில் கலந்துகொள்ளும் புகைப்படம், வார்ரூம் பகிர்ந்து கொள்கிறார்கள். கோமாளிகள். யார் அந்த வெங்காயம்? பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மருத்துவர் சான்றிதழில் கையொப்பமிடவில்லை, அதனால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்பது செய்தி என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்.