தமிழ்நாட்டில் பாஜகவை முடித்துக் கட்ட அண்ணாமலை ஒருத்தரே போதும் என்று காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவில் நீண்ட நாட்களாக கட்சியில் பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். அவரும் தமிழக பாஜக மாநிலதலைவர் அண்ணாமலைக்கும் மோதல்கள் இருந்து வந்த நிலையில் பாஜக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் அதன் பிறகு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அண்ணாமலையைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் தமிழக பாஜக தொழில்நுட்பத் துறை தலைவராக இருந்தவர் CTR நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
நீண்ட காலமாக பாஜகவிலிருந்து பணியாற்றி வந்த CTR நிர்மல்குமார் பாஜகவிலிருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் மிகவும் வேதனை அளிக்கிறது. உங்களைப் போன்ற இன உழைப்பாளரைக் கண்டறிவது மிகவும் கடினம் பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அதில் நிர்மல குமாரைப் போலவே அண்ணாமலை தங்களை உளவு பார்ப்பதாகவும் “இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ?. சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பார்ப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல..” என தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் வேர்களைக் கண்டறிந்து தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Annamalai was asked to reach grassroots to grow BJP in Tamil Nadu but
Instead Annamalai is cutting off the BJP roots in Tamil Nadu. TNBJP doesn’t need DMK, VCK, MDMK, CPI, INC or NTK to do finish BJP in Tamil Nadu, Annamalai is good enough to finish BJP in Tamil Nadu.— Gayathri Raguramm – Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) March 6, 2023
ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவின் பெயர்களை அண்ணாமலை அறுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜகவை முடிவுக்குக் கொண்டுவர திமுக, விசிக, அதிமுக, சிபிஐ, காங்கிரஸ் அல்லது நாம் தமிழர் கட்சிகள் போன்றவை தேவையில்லை.
அண்ணாமலையே போதும் என்றும் 420 மலையிடம் இருந்து காரியாகரர்கள் விலகிச் செல்வதாகக் கடுமையாக காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.