மெக்சிகோவில் இறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதி சடங்கின்போது திடீரென கண் விழித்துப் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவரின் கவனக்குறைவு காரணமாக தான் இந்த நிலை ஏற்பட்டதாக கூறி மருத்துவர் மீது ‘நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில் 3 வயது சிறுமி கேமிலா என்பவர் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிறுமி கமீலா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
மேலும், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமிக்கு மாத்திரை கொடுத்தனர். இருப்பினும், சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அந்த சிறுமியின் உறவினர்கள் சோகத்தோடு உடலை குளிர்சாதன பெட்டியில் வைத்து, அதன்பின் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.அப்போது, எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாக கருதப்பட்ட சிறுமியின் கண்களில் திடீர் அசைவு தெரிந்தது. அப்போது சிறுமியின் கையை லேசாக அசைந்ததாகவும், கண்விழித்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் சிறுமி உயிரிழக்கவில்லை என்று தெரிந்ததும், மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த சிறுமி மீண்டும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.