கர்நாடக துணை முதல்வர் மேகதாது அணை கட்டுவது குறித்தும், காவிரி நீரை தருவது குறித்தும் முரண்பாடாக பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடும் கண்டன்ம தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜி.கே.வாசன் கூறிருப்பதாவது :
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வரின் பேச்சை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
கர்நாடக துணை முதல்வர் மேகதாது அணை கட்டுவது குறித்தும், காவிரி நீரை தருவது குறித்தும் முரண்பாடாக பேசுவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என்பதால் தமிழக அரசு இனியும் பொறுமை காக்காமல் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத்தர உறுதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
தமிழக அரசு கூட்டணி தர்மம், கர்நாடகாவில் நடைபெற இருக்கும் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகியவற்றை தாண்டி மேகதாது அணை, காவிரி நீர் ஆகியவற்றில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு தான் முக்கியம் என்பதை உறுதி செய்து கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.