தங்க நகைகளை கிலோ கணக்கில் அணிந்து கொண்டு கோவில் வளாகத்தில் நடந்து வந்த குடும்பத்தினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
திருப்பதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அவ்வப்போது சினிமா பிரபலங்கள் தரிசனமும் வைரலாகும்.
இந்த முறை மகாராஷ்டிரா மாநிலம் புனோவைச் சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.
இதையும் படிங்க : தனியார் பள்ளியில் சரிந்து விழுந்த பால்கனி – 40 மாணவர்கள் காயம்!!
தினமும் ஏராளமானோர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபடுகின்றனர். அந்த வகையில், இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயிலில் ஒரு குடும்பம் ஏழுமலையானை வழிபட்டனர்.
இதில் கவனிக்க வைத்த விஷயம் என்னவென்றால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் மூன்று பேரும் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை கழுத்தில் அணிந்து கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டது தான்.
கிலோ கணக்கில் கழுத்தில் தங்க ஆபரணங்களுடன் சாமி கும்பிட வந்த மூன்று பேரையும் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அனைவரும் வியப்புடன் வேடிக்கை பார்த்தனர்.
ஆனால் அவர்களோ யார் பார்த்தால் என்னவென்று சாதாரணமாக கடந்து சென்றனர். இவர்களை கோயிலுக்கு வெளியே பார்த்த பல பக்தர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டு மகிழ்ந்தனர்.