சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் (Government bus) இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயமடிந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கி நேற்று மதியம் அரசு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தின் (Government bus) கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 27 வயது பெண் ஒருவர் அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் இருந்த பலகை உடைந்து தவறி கீழே விழுந்தார்.
அந்த பெண் அலறல் சத்தம் கேட்டு பேருந்தை ஓட்டுனர் உடனடியாக நிறுத்தினார். இதனை அடுத்து கீழே விழுந்ததில் லேசான காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த விபத்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சம்பவம் குறித்து அறிந்த அமைந்தகரை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதையும் படிங்க : NIA investigation : ஆஜரான NTK நிர்வாகிகள்
ஓட்டை விழுந்த பஸ்சை பார்வையிட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். ஓட்டுனர் நடத்துனரிடம் சம்பவம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்து கூறிய அமைச்சர் சிவசங்கர், அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1755129370145071506?s=20
அரசு சார்பில் போக்குவரத்து கழக பஸ்களை பராமரிக்க அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.