வெளிநாட்டு, வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொடுப்பதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விண்வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழ் கற்பிப்பதற்காக வசதியை ஏற்படுத்துதல், இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தருதல், தமிழை வெளிநாட்டு, வெளிமாநிலங்களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி ஒடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அகரம் முதல் சிகரம் வரை பல படிநிலைகளாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு, சான்றிதழ் தேர்வு நடத்தவும் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது