Governor Action | தமிழக அரசுக்கும் ஆளுனருக்கும் மோதல் தொடரக்கூடாது என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வந்தார் .அவருக்கு தமிழக அரசு சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது.
சிவப்பு கம்பள வரவேற்பில் தனது இருக்கைக்கு ஆளுநர் வந்தார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அடுத்து தமிழக ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கத்தொடங்கினார்.
அப்போது தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் தொடங்கும் போது வாசிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை கூறினார்.
மேலும் தமிழக அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை.
உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்கவிரும்பவில்லையென தெரிவித்து தனது உரையை முடித்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து ,இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியும், அரசு தயாரித்த உரை மட்டுமே இடம்பெறும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசுக்கும் ஆளுனருக்கும் மோதல் தொடரக்கூடாது என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.இரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார்.
ஆளுனர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுனர் உரையில் இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, ஆளுனரின் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் ஏற்றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த போது,
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளுனரின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதையும் படிங்க: conductor attack-‘நடத்துனரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்..’ வைரலாகும் Video
கடந்த ஆண்டு ஆளுனர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதே தான் இப்போதும் தொடர்ந்திருக்கின்றன.
தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுனர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதேபோல், ஆளுனர் உரைக்கு முன் தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுனர் அலுவலகத்திற்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை.
தமிழக அரசுக்கும், ஆளுனருக்கும்(Governor Action) இடையிலான மோதல் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய மோதல் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசும் ஆளுனரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல.இப்போக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உருவாகிவிடும்.
இனியாவது இரு தரப்பும் நடந்ததை மறந்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.