தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவியுடன் பிரதமர் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று 1 பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். இதனைத் தொடர்ந்து அழகர் கோயில் சாலையில் உள்ள அரசு விருதுநகர் மாளிகையில் மதிய உணவை முடித்துவிட்டு 4:00 மணி அளவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
ஆளுநருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்பம் வழங்கப்பட்டது. ஆளுநர் ஆர் என் ரவியுடன் பிரதமர் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராயின் உடன் வந்திருந்தார்.
சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, முக்குருணி விநாயகர் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தனர். பின்னர் மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு தமிழக ஆளுநர் ரவி பிரசாதம் அளித்தார்.
மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக இன்று இரவு விருதுநகரில் ஓய்வெடுத்து ஆளுநர் நாளை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.