ஹன்சிகாவின் ‘கார்டியன்’.. அல்லுவிடச் செய்யும் டீசரா? எப்படி இருக்கு?

நடிகை ஹன்சிகா நடித்துள்ள ‘கார்டியன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கார்டியன்’. இந்த படத்தய் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், டைகர் கார்டன் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கார்டியன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

யூ டியூபில் வெளியாகியுள்ள படத்தின் டீசர் வீடியோ காட்சியில் ‘இந்த கொடூர ஆத்மா பல பேரோட உயிர எடுக்க காத்துட்டு இருக்கு’ என மொட்டை ராஜேந்தின் குரலில் ஒலிக்கும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து பேயாக சில காட்சிகளில் ஹன்சிகாவை ஏற்றுக்கொள்வது சிரமமாக உள்ளது. அவரது ரியாக்சன்ஸ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக ‘நீ கோயில்ல இருந்தாலே கொன்னு பொதச்சுடுவேன். இது என் இடம்’ என ஹன்சிகா பேசும் இடமும், அதைத் தொடர்ந்து அவரின் ஆக்சனும் இன்னும் மெனக்கெடலை கோருகிறது. ‘அரண்மனை’க்கு பிறகு நடிகை ஹன்சிகா இந்தப்படத்தில் பேயாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts