ஆசிய கோப்பை t20 தொடர் தற்போது துபாயில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாம் போட்டியான இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ( hardik pandya ) பேட்டிங் பவுலிங் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வெற்றிபெற உதவினார்.
இந்த போட்டியின் மூலம் பல சாதனைகள் முறியடிக்கபட்டுள்ளன, இந்த போட்டியில் பாண்டியா 30 க்கும் அதிகமான ரன்கள் எடுத்ததோடு 3 விக்கெட்களையும் கைபற்றியுள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் இரண்டு முறை இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் தற்போது பாண்டியா 3வது முறையாக நிகழ்த்தி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் சர்வதேச t20 போட்டிகளில் கடைசி 4 ஓவர்களில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தற்போது மொத்தம் 34 சிக்சர்கள் அடித்துள்ளனர் இதற்கு அடுத்து இடத்தில் யுவராஜ் சிங் 31 சிக்சர்கள் அடித்துள்ளார். அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் 28 ஆசிய கோப்பை விளையாடிய இலங்கை அணியின் பேட்ஸ்மேன் ஜயவர்தனே சாதனையை இந்த போட்டியின் மூலம் சமன் செய்துள்ளார்.
சர்வதேச T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக இதுவரை நியூசிலாந்து நாட்டின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில்( 3497 ரன்கள் ) இருந்து வந்தார். இந்த போட்டியில் 12 ரன்கள் அடித்ததன் மூலம் தற்போது மொத்தமாக 3499 ரன்கள் குவித்து அந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஹித். விராட் கோலி 3343 ரன்களுடன் மூன்றாம் இடத்திலுள்ளார்.