பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைவர் ஹர்மன் ப்ரீட்( Harmanpreet Kaur ) விக்கெட் தான் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த 2 நாட்களாக இந்த விக்கெட் சர்ச்சை கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீட் பேட்டிங் செய்து வந்தார், 35 வைத்து ஓவரில் வீசிய பந்தில் அவர் லெக் பைஸ் விக்கெட் ஆகினார். இந்த முடிவை சற்று எதிர்பார்க்காத ஹர்மன் தனது பேட்டை வைத்து ஸ்டம்ப்பை அடித்தார், அடித்த வேகத்தில் ஸ்டம்ப் பறந்து சென்று விழுந்தது, இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டது.
இந்த ஒருநாள் போட்டி இறுதியில் சமனில் முடிந்த நிலையில் கோப்பையை இருநாட்டிற்கும் பகிர்ந்துக் கொடுக்கப்பட்டது. நிறைவாக கோப்பை வழங்கும் நிகழ்வில் இருநாட்டு வீராங்கனைகளும் கோப்பையுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள நின்றனர். அப்போது ஆவேசமான ஹர்மன்ப்ரீட்( Harmanpreet Kaur ) பங்களாதேஷ் வீராங்கனைகளை பார்த்து, ” ஏன் நீங்கள் மட்டும் வந்து நிற்கின்றீர்கள் உங்கள் நடுவரையும் வர சொல்லுங்கள் அவர்களால் தான் இன்று இந்த கோப்பை உங்களுக்கு கிடைத்தது, அவர் தான் வெற்றிக்கு உதவினார்”, என கடுமையான விமர்சனம் வைத்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பங்களாதேஷ் கேப்டன் சுல்தானா புகைப்படம் எடுக்காமல் பாதியிலே தங்கள் அணி வீராங்கனைகளுடன் பெவிலியன் சென்று விட்டார். இந்த நிகழ்வு முடிந்த கையுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹர்மன் ப்ரீட் பேசுகையில், ” இனி நாங்கள் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் வரும் வேளையில் பல முன்னெச்சரிக்கையுடன் தான் வர வேண்டும், இது போன்ற மோசமான நடுவர் தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இவை எங்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது, வரும் காலங்களில் இதையும் சமாளிக்கும் வண்ணம் எங்கள் பயிற்சி இருக்கும்” என்றார்.
இந்த செய்தி வந்த சிறிது நேரத்துக்குள் பங்களாதேஷ் அணியின் கேப்டன் சுல்தானா, ” ஹர்மன் ப்ரீட் கூறியது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் கண்ணியமாகவும், நெறியுடனும் நடக்க வேண்டும் அப்படி நடக்காமல் செல்வது அவரது பிரச்சனை, மேலும் போட்டியில் நடுவர்கள் முடிவே இறுதியானது அதில் நமக்கு விருப்பம் இல்லையென்றாலும் அவை தான் போட்டியில் இருக்கும் நடைமுறை அதை புரிந்து கொள்வது தான் சரி.
இந்த போட்டி முடிந்தவுடன் இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீட்டுக்கு போட்டியின் 75 சதவீத தொகையை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது, கூடுதலாக 3 டிமெரிட் புள்ளிகளை வழங்கியுள்ளனர்.