ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதில் பாஜக அரசு இந்த மாதத்துடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என்றும் தேசத்திற்கு சேவை செய்வதாகவும், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்தும் ,
சமூக நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், மேலும் இந்திய பெண்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதாகவும் இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் உரையில் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார் .
மேலும்உலகமே இன்று இந்தியாவை பெரும் எதிர்பார்ப்புடன் உற்றுநோக்குகிறது என தெரிவித்த அவர் நம் நாட்டு மக்கள் பாஜகவை மிகவும் நம்புவதாகவும் தெரிவித்தார் .
ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் என்றும் கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் மற்றும் பிரிவினை வாதத்தை தூண்டும் வகையில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார் .
தேசிய கல்விக்கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்