முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது
அப்போது இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறியது , அது குறித்து அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை எதிர்வாதம் செய்தது.
நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி அதற்கு நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலைத் தான் எதிர்பார்க்கிறோம் என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்
Also Read : மத்திய அரசிற்கு எதிராக ஜூலை 27இல் திமுக ஆர்ப்பாட்டம்..!!
நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை. தடயவியல் நிபுணர்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத்தான் நாங்கள் எங்கே எனக் கேட்கிறோம்;
இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால் நாளை தள்ளி வைக்கிறோம் பதில் கூறுங்கள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது பென் டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென எப்படி, அதில் வந்தது என அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது
இன்று சரிவர பதில் கிடைக்காததால் இந்த வழக்கின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.