தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 3 நாள்களுக்கு கனமழை -மீனவர்களுக்கு எச்சரிக்கை

heavy-rain-expected-tamilnadu-in-next-3-days
heavy rain expected tamilnadu in next 3 days

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்காலில் நாளை முதல் 3 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy-rain-expected-tamilnadu-in-next-3-days
heavy rain expected tamilnadu in next 3 days

மேலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாககவும் திருச்சி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், தேனி திருவண்ணாமலை, திருப்பத்தூர், கோவை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts