வேலூரில் குடும்பத்தகராறு காரணமாக மூன்று குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சலவன்பேட்டை பகுதி கச்சேரி தெருவை சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் கூலித்தொழிலாளியான தினேஷ். இவரது மனைவி 23 வயதான ஜீவிதா. இவர்களுக்கு 7 வயதில் அக்சயா என்ற பெண் குழந்தையும், 5 வயதில் நந்தகுமார் என்ற ஆண் குழந்தை மற்றும் ஆறு மாத கைக்குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கூலித்தொழிலாளியான தினேஷ் தினமும் மதுபோதையில் வந்து ஜீவிதாவையும் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி தகராது செய்துள்ளளர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜீவிதா, தனது 6 மாத ஆண் கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகளையும் கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெற்கு காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஜீவிதாவின் கணவர் தினேஷ்குமாரை கைது செய்த வேலூர் தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் கொலை மற்றும் சந்தேக மரணம் என இரண்டுப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 குழந்தைகளை கொலை, செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.