தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ,தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், ஜூன் 22, 23ல் வட தமிழகம், குமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது