காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், தாழ்வு மண்டலம் எங்கு கரையை கடக்கும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சென்னைக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
மேலும், சென்னை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துவருகிறது.
அதுமட்டுமல்லாமல், திருவாரூர்,தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.