ஓமன் நாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலில் உருவான ஷாஹீன் புயல், ஓமன் நாட்டில் கரையை கடந்தது. புயல் காரணமாக ஒமனில், சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்தது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
புயல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் அவசர ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெரும் சேதங்களை தவிர்க்கும் வகையில், கடலோரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.