ராஜஸ்தானில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஜெய்ப்பூர், கரவுலி, சவாய் மாதோபூர் உள்ளிட்ட இடங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஜெய்ப்பூரில் நிரம்பி வழியும் கனோடா அணை நீரில் மூழ்கி, 5 இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இதையும் படிங்க : மோகன்லால் குறித்து அவதூறு.. கேரள யூ-டியூபர் கைது!!
மேலும், பாரத்பூரில் ஸ்ரீநகர் கிராமம் அருகே உள்ள ஆற்றில் மூழ்கி, ஏழு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளுடன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். தொடர் கன மழை காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் பேரிடர் மேலாண்மை நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, முதல் மந்திரி பஜன் லால் சர்மா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர், ராஜஸ்தான் மாநில மக்கள் அனைவரும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும்,
பேரிடர் மேலாண்மைத் துறையினர் வழங்கும் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்’ எனவும் முதல் மந்திரி பஜன் லால் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.