ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற காட்டேரி பகுதியில் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சூலூரிலிருந்து நேற்று குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இதனை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் சாலை ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.
மேலும் ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் பதிவுகளை வைத்தே விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என்பதால் கருப்புப்பெட்டியை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்ட நிலையில், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கருப்புப் பெட்டி உள்ளிட்ட 3 பொருட்களை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கண்டுப்பிடிக்கப்பட்ட கருப்பு பெட்டியை பெங்களூரு அல்லது டெல்லிக்கு அனுப்பி ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.