கடுமையான குளிர்காலம் நிலவி வருவதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மாநிலம் தழுவிய குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா தொற்று குறைவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் பல மாநிலங்களில் கடுமையான குளிர்காலம் நிலவி வருவதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மாநிலம் தழுவிய குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 31 முதல் அடுத்த 15 நாட்களுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குளிர் கால விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெற்றோரின் ஒப்புதலுடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும் ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பள்ளிகள் நடத்தப்படும் என உத்தரப்பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.