“இதுனால தான் முகக்கவசம் போடல” – பிரதமர் மோடியை சுட்டிகாட்டிய சிவசேனா எம்.பி

நான் முகக்கவசம் அணியாததற்கு பிரதமர் மோடி தான் காரணம் என சிவசேனா எம் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று நாசிக்கில் நடந்த நிகழச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் முககவசம் அணியாமல் இருந்து உள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அவர் பதிலளித்து கூறியதாவது:-

பிரதமர் மோடி பொது மக்களை முககவசம் அணியுமாறு கூறுகிறார். ஆனால் அவரே முககவசம் அணிவது இல்லை. மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முககவசம் அணிகிறார். ஆனால் மோடி தான் நாட்டின் தலைவர். எனவே மோடியை பின்பற்றுகிறேன். பொதுமக்களும் முககவசம் அணிவதில்லை.

எனினும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது தடை உத்தரவுகள் அமலில் உள்ளது. எனினும் பொருளாதார வளா்ச்சியை பாதிக்கும் என்பதால் பகல் நேரத்தில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இருக்க கூடாது என விரும்புகிறேன்.

சுப்ரியா சுலே, அவரது கணவர், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரஜக்த் தான்புரே, வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொது நிகழச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

Total
0
Shares
Related Posts