மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி படத்தின் ஒரு பார்வை நாடே கொண்டாடவேண்டிய நம்பி நாராயணன் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். அவரது குடும்பம் சமூகத்தால் அவமானம் படுத்தப்படுகிறது அதற்கு முன்பு என்ன நடந்தது?அதற்குபின்பு என்ன நடந்தது ? என்று தொடங்குகிறது ராக்கெட்ரி நம்பி திரைப்படம் .விக்ரம் சாராபாய் சிஷியர்களாக நம்பி நாராயணன் மற்றும் அப்துல் காலம் ஆகியோர் உள்ளனர்.
அதில் லியூட்பெயல் எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.இவர் நாசாவில் பணியாற்ற நம்பிக்கு வாய்ப்பு கிடைத்து.இந்த நிலையில் சாராபாய் இஸ்ரோவிற்கு தேவை என்று விக்ரம் சாராபாய் அழைக்கிறார்.இந்த நிலையில் அதிக சம்பத்துக்கு வேளையா இல்லை தாய் நாட்டுக்குச் சேவையா என்ற நிர்ப்பந்தத்தில் நம்பி இருக்க,ஒரு கட்டத்தில் இந்திய திரும்புகிறார் நம்பி நாராயணன்.இந்தியாவில் குறைந்த செலவில் எப்படியாவது ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்திய விஞ்ஞானிகளை பிரான்ஸ் அழைத்துக் கொண்டு செல்கிறார்.அங்கு உருவாக்கப்படும் இயந்திரங்களின் தயாரிப்பு பற்றி அந்தநாட்டு விஞ்ஞானிகளுக்குத் தெரியாமல் கற்றுக் கொண்டு நாடு திருப்பும் காட்சிகள் இப்படத்தில் ரசிகர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.பல்வேறு வகையான தொழிநுட்பங்களை கற்றுக்கொண்டாலும் அதைச் செயல்படுத்தப் பல ஆண்டுகள் ஆகும்.மேலும் ஒருகோடி ரூபாய் அரசு தரப்பிலிருந்து தரப்படுகிறது.
இந்தநிலையில்,60 லட்சம் ரூபாய் செலவில் லியூட்பகல் என்சினை தயாரிக்கிறார் நம்பி.இந்த நிலையில் 4 எஞ்சின்களை ரஷ்யாவிடம் இருந்து பெற இந்திய முடிவு செய்கிறது .இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ரஷியாவை மிரட்டுகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து4 எஞ்சின்களை எப்படி இந்தியாவுக்குக் கொண்டுவருகிறார் நம்பி போன்ற காட்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதற்குப் பின் நம்பி நாராயணனின் வாழ்க்கை புரட்டிப் போடுகிறது.
இஸ்ரோ அமைப்பிற்கு இயக்குனராக ஆக வேண்டும் என்ற நம்பி என்ன ஆனார் ,எப்படி ஆனார் அவருக்குப் பின்னல் இருக்கக் கூடிய சதி என்ன ?அவர் மீண்டு வந்தாரா போன்ற காட்சிகள் இப்படத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தின் முதல் பாகம் ராக்கெட்டின் இன்ஜினை பற்றி நகர்கிறது.இப்படத்தில் பேசப்படும் வசனங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்குப் புரியும் என்றால் அது சந்தேகம் தான்.
மேலும் நம்பி கைதுக்குப் பின் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உணர்ச்சிப் பூர்வமாகத் தனது நடிப்பில் காட்டி இருப்பார் மாதவன்.அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்.உண்மை சம்பவங்களைக் கொண்டு எடுக்கப்பட்டதால் இப்படம் வணிகம் காட்சிகளைத் தவிர்த்து மெதுவாகச் செல்லும் ஆனால் கதையிலிருந்து ஒருபோதும் மக்களைத் திசை திருப்பி மக்களைக் கதையிலிருந்து வெளியே வரவில்லை.
இப்படத்தில் மாதவனின் செயல்கள் அனைத்தும் பாராட்டுக்குரியது.இப்படத்திற்காக மாதவன் உடல் எடையை அதிகரித்தும் ,குறைத்தும் தனது உழைப்பைக் கொட்டி இருப்பார்.இப்படத்தில் சூர்யா மற்றும் அவரது மனைவியாக சிம்ரன் இவர்களது நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்து இருக்கும் . ராக்கெட்ரி படத்திற்கு இசை பெரும் பங்கு வகிக்கிறது.