ஹைதராபாத்தில் 16 வயது சிறுவன், ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபையர் (mobile gaming) மீதான மோகத்தால் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 36 லட்சம் ரூபாயை எடுத்து விளையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத் அம்பேர்பேட் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் செல்போனில் ஃப்ரீ ஃபையர் கேமை (mobile gaming) இன்ஸ்டால் செய்து விளையாடியுள்ளான்.
கேமில் அடுத்தடுத்த லெவல் செல்வதற்கு ஸ்கில்ஸ் மற்றும் வெப்பனுக்காக சிறிது சிறிதாக முதலில் 1500 ரூபாய் என தொடங்கி பத்தாயிரம் ரூபாய் வரை பணம் செலவழிக்க தொடங்கியுள்ளான். இப்படி வீட்டுக்குத் தெரியாமல் கிட்டத்தட்ட 36 லட்சம் ரூபாய் வரை எடுத்து செலவு செய்துள்ளான்.
இந்நிலையில், தனது வங்கி கணக்கிலிருந்து பணம் திடீரென குறைந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் வங்கிக்கு சென்று விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்துள்ளது.
மேலும் சமீபத்தில், சீனாவில் 13 வயது சிறுமி இதேபோன்று ஆன்லைன் கேமில் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்து 52 லட்ச ரூபாயை செலவழித்தது குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போன 36 லட்சம்.. சிறுவனின் ஆன்லைன் விளையாட்டு மோகம்..!
ஹைதராபாத்தில் 16 வயது சிறுவன், ஆன்லைன் விளையாட்டான ஃப்ரீ ஃபையர் மீதான மோகத்தால் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 36 லட்சம் ரூபாயை எடுத்து விளையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹைதராபாத் அம்பேர்பேட் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் செல்போனில் ஃப்ரீ ஃபையர் கேமை இன்ஸ்டால் செய்து விளையாடியுள்ளான்.