சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான ( tncm speech ) விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கருத்துகளை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்கலாம். அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்துவிட்டார். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில், இந்த பிரச்னையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களை பட்டியலிட்டு அரசியல் செய்ய விரும்பவில்லை; சமூக விரோத ( tncm speech ) சக்திகளிடம் இருந்து மக்களை காக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .