இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களுக்கு சினிமாதுறையில் இருந்துபல்வேறு நடிகர் ,நடிகைகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் படத்தை பற்றி சாய்பல்லவி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் காஷ்மீர் பண்டிட்டுகளின் படுகொலை மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல், கும்பல் தாக்குதல்களை மையப்படுத்தி பேசியதற்கு சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களை அடுத்து நடிகை சாய் பல்லவி, விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியதாக கூறியுள்ள சாய் பல்லவி, எந்த மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையும் பெரும் தவறு தான் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.