தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின்(jayalalithaa) சொத்தில் பங்கு கேட்டு வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மகள் தான் தான் என்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது .பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாரிசு என்று அவ்வப்போது ஒருசிலர் கிளம்பி வந்ததையும் ஊடகங்களில் பார்க்க முடிந்தது. மேலும் இந்த சம்பவம் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்தது. இதுபோலவே ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் வியாசரபுரா பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். 83 வயதான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியினுடைய மகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே, ஜெயலலிதா சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கோரியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த மனு மீதான விசாரணை மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் இதனை விசாரிக்க உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனு தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும் படி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஜெயலலிதாவின் சொத்தில் பங்கு கேட்டு வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது .மேலும் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதால் அதனை முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தொண்டர்களும் ,பொதுமக்களும் தெரிவித்து உள்ளனர்.