சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே பொதுக்குழுவை புறக்கணித்து ஓபிஎஸ் அவர்கள் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அதேநேரம், தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தனது பிரசார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்படுவதாக உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா, அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும் என்றும், நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,திமுக அரசு மக்களுக்கு சொன்னதை செய்யவில்லை என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டிய அவர் ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவில் அம்மா அவர்களால் கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்துவது நல்ல தல்ல என்று தெரிவித்துள்ளார்.