தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை(IASTrasfer) பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
▪️ வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக பி.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
▪️ தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக எஸ்.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
▪️ முதலமைச்சரின் முகவரி துறையின் மக்களுடன் முதலமைச்சர் திட்ட சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.