நாட்டில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் வளர்ச்சியடையும்போது, நாடும் வளர்ச்சி அடையும் என பழங்குடியினரின் பெருமை தினத் விழாவில் பிரதமர் மோடி(pm modi) தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜார்கண்ட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றார்.
இந்த நிலையில்,பிர்சா முண்டாவின் பிறந்த இடமான ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டுவில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, பழங்குடியினர் பெருமை கூறும் வகையில், குந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி பழங்குடியின வளர்ச்சிக்கான, விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பழங்குடியினரின் பெருமை தினத்தையொட்டி, பழங்குடியின மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாட்டில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் வளர்ச்சியடையும்போது, நாடும் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.