கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2700 தூய்மைப் பணியாளர்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியில்(karunanidhi) உருவம் வடிவமைத்து மதுரை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது.
மதுரை மாநகராட்சியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2,752 தூய்மை பணியாளர்களைக் கொண்டு ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்karunanidhi) உருவத்தை வடிவமைத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை உலக சாதனை “டிரம்ப புத்தகத்தில்” பதிவு செய்வதற்காக அதன் நடுவர்கள் பங்கேற்று இந்த சாதனையை ஏற்றுக்கொண்டு அதற்கான சான்றிதழை தமிழ்நாடு தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜனிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தளபதி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தூய்மை பணியாளர்கள் 2700பேரும் காலை 6 மணிக்கு அழைத்து வரப்பட்டு மூன்று மணி நேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு உரிய தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் புலம்பினர்.