சேலம் அருகே, திடீரென தீ பற்றி எறிந்த ஆம்னி பேருந்து.. அலறியடித்துக் கொண்டு பேருந்தை விட்டு வெளியேறிய பயணிகள்..11 பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம் (passengers injured)..
சேலம் அருகே பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, கோயம்புத்தூரிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, சேலம் மாவட்டம், சாம்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து தீப்பற்றி எறியத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, அதிர்ச்சியில் பயணிகள் அனைவரும் அலறிஅடித்தபடி உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி பேருந்தில் பற்றி எறிந்த தீயை அணைத்தனர்.
மேலும், இந்த தீ விபத்தில் 11 பயணிகளுக்கு லேசான தீக்காயம் (passengers injured) ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பேருந்தில் இருந்த பயணிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையானது.
இதனையடுத்து, இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென தீ பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.