பாஜக ஆட்சி நடந்த கடந்த 10 வருடங்களில் விவசாய விளை பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார் .
பாஜகவின் 10 வருட ஆட்சி குறித்து பேசியுள்ள நாராயண் திருப்பதி கூறிருப்பதாவது :
கடந்த 10 வருடங்களில் பாஜக ஆட்சியில் (Agriculture products) விவசாய விளை பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலை அதிகரிப்பு.
நெல் – 61%, சோளம் – 108%, கம்பு : 100%, மக்காசோளம் – 60%, கேழ்வரகு – 148%, நிலக்கடலை – 59%, கோதுமை – 57%.
2012-13 ல் 25.7 கோடி டன்னாக இருந்த விவசாயஉணவு தானிய உற்பத்தி 2022-23ல் 31.56 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
(Agriculture products) விவசாய உற்பத்தியில் தனியார் பங்களிப்பு 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக சராசரியாக 4.6 விழுக்காடு வளர்ச்சி விவசாய துறையில் அதிகரித்து வருகிறது.
நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக ஆட்சியின் சாதனைகளில் மிக முக்கியமானது விவசாய உற்பத்தியில் அடைந்துள்ள முன்னேற்றம் என தெரிவித்தார்.
இதையடுத்து தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசியுள்ள அவர் கூறியதாவது :
“முதலமைச்சர் வெளிநாடு செல்வது தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை திரட்டுவதற்கா அல்லது அவருக்கான முதலீடுகளை திரட்டவா என தெரியவில்லை
இதை நான் கேட்கவில்லை. ஆகஸ்ட் 24,2019 அன்று அன்றைய எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டது என விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் புகழ் புகழை காவல்துறை கைது செய்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்த நாராயணன் திருப்பதி கூறியதாவது :
பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் திருச்சி புகழ் அவர்களை தமிழக காவல் துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
Also Read : https://itamiltv.com/rajinikanth-explanation-for-sanghi-word-controversy-in-chennai-airport/
தொடர்ந்து சமூக ஊடகங்களின் மூலம் தாக்கம் ஏற்படுத்துபவர்களை அச்சுறுத்தும் வகையில் முக்கிய நிர்வாகிகளை கைது செய்வது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல
சர்வாதிகார போக்கும் கூட. கைது செய்யப்பட்ட புகழ் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.