உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி பல புதிய சாதனைகளை படைத்துள்ளது.
பெங்களூரில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்திய மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் . இந்திய அணி அபார வெற்றி பெற்றதுடன் பல சாதனைகளையும் படைத்துள்ளது.
ஒரே போட்டியில் இந்திய அணி படைத்த சாதனைகள் மற்றும் சுவாரஸ்ய தருணங்கள் :
- நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் 9 பவுலர்களை பயன்படுத்திய இந்திய அணி. ODI உலககோப்பையில் இது 3வது நிகழ்வு ஆகும் .
- உலககோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், 5 பந்துகள் மட்டுமே வீசி 1 விக்கெட் கைப்பற்றினார் கேப்டன் ரோஹித் ஷர்மா
- உலககோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பவுலிங் வீசிய இந்திய அணியின் பேட்டர்கள் கில், விராட் கோலி . ரோஹித்,சூர்யகுமார் இதில் விராட் கோலி மற்றும் ரோஹித் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர் .
- உலககோப்பை தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்தார் . பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார்.
- 50 ஓவர் உலககோப்பையில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.
- பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் விளாசி புதிய சாதனை படைத்தனர்!
- 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் முதல்முறையாக, முதல் 5 பேட்டர்களும் அரை சதம் விளாசி உள்ளனர்!
- சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது நிகழ்வு ஆகும். (AUS vs IND, Jaipur, 2013 | AUS vs IND, Sydney, 2020)
- நடப்பு உலககோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி!
டி காக் – 591
ரச்சின் – 565
ரோஹித் – 503
- சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது அரை சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹித் ஷர்மா!
- நடப்பாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் சுப்மன் கில்
- ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் ஷர்மா 24 , மோர்கன் – 22 (2019) | டிவில்லியர்ஸ் 21 (2015)
- சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஒரு ஆண்டில் மட்டும் 59* சிக்ஸர்கள் பறக்கவிட்டு, அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா!
டி வில்லியர்ஸ் – 58 (2015)
கெயில் – 56 (2019)
- சர்வதேச போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கி 14,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா.