இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனையாக வலம் வரும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி கடைசி ஆட்டத்தில் கண்பட்டது போல் தோல்வியை சந்தித்தது.
20 ஓவர் தொடரை தொடர்ந்து வங்காளதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மிர்புரில் நடைபெற்றது .
20 ஓவர் தொடரை கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடிய இந்திய அணி வங்காளதேச அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு கொடுத்தது .

முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி சுமாராக பேட்டிங் செய்து இந்திய அணிக்கு 154 ரன்களை இலக்காக கொடுத்தது . இதையடுத்து எளிதில் வென்றுவிடலாம் என்ற மெத்தனத்தில் களமிறங்கிய இந்திய அணி வங்காளதேசத்தை விட படுமோசமாக பேட்டிங் செய்தது .

இந்திய அணியின் இந்த சொதப்பலான ஆட்டத்தால் 35.5 ஓவர்களில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து வங்காளதேச அணியிடம் தோல்வியை ஒப்புக்கொண்டது . ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி வங்காளதேசத்திடம் வீழ்ந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இந்தியா – வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் உள்ள மைதானத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது .

வங்காளதேசத்திடம் பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணியும் .வெற்றியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் வங்காளதேச அணியும் இன்று களமிறங்க உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது .
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.