இந்தியாவில் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடக்கி நடைபெற்று வருகிறது .
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 5-ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது .
இதையடுத்து அணைத்து அணிகளும் சிறப்பாக தயாராகும் வகையில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களை ஐ.சி.சி.ஏற்பாடு செய்துள்ளது.
அந்தவகையில் உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் கடந்த செப் 29 ஆம் தேதி முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
உலக கோப்பைக்கு தயாராக பயிற்சி ஆட்டங்கள் முக்கியம் என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது .
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பயிற்சி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் தங்களது அணியில் உள்ள 15 வீரர்களையும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் இன்றைய போட்டி நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை .
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டத்தில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.