இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற பெற உள்ளது .
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், மூன்று ஒரு நாள் மற்றும் 5, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது .
இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கெத்தாக கைப்பற்றியுள்ள இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது .
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள தரோபா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது .
இதையடுத்து முதல் போட்டியில் பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் தாங்கள் ‘நம்பர் ஒன்’ அணி என்பதை நிரூபிக்கவும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது . இந்த பக்கம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை தவற விட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது .
இந்திய நேரடி இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணி மோதவுள்ளது . இந்த இரு அணிகளும் இன்று மோதுவது 27-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நேருக்கு நேர் நடந்த 26 ஆட்டங்களில் 17-ல் இந்தியாவும், 8-ல் வெஸ்ட்இண்டீசும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இல்லை இல்ல மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பணியுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம் .