இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆஸ்ட்ரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுடன் மொத்தமாக 2 t20 தொடரில் விளையாடவுள்ளது. ஆஸ்ட்ரேலியாவுடனான t20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மொகாலியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடர் மிகவும் சவால் வாய்ந்ததாக இருக்கும். ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி சற்று மோசமன ஆட்டத்தை வெளிக்காட்டியது. குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடாதது அணிக்கு பெரும் சரிவை கொடுத்தது. ஆசிய கோப்பை தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த பண்ட், பாண்டியா , ஹூடா ஆகியோரும் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
சென்ற தொடரில் ரிஷப் பண்ட், ஹூடா சரியாக விளையாடாததால் இந்த போட்டியில் அவர்களுக்கு பதில் தினேஷ் கார்த்திக் களமிறக்கபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக பவுலிங்கில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பூம்ரா, ஹர்ஷ் படேல் அணிக்கு திரும்பியுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் காயத்தால் பங்கேற்காத நிலையில் ஆஸ்ட்ரேலிய தொடரில் களமிறங்கவுள்ளனர்.
ஆனால் உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள மொஹம்மத் ஷமி இந்த தொடரில் பங்குபெறவில்லை அவருக்கு பதிலாக தீபக் சாகர், மற்றும் உமேஷ் யாதவ் சேர்க்கபட்டுள்ளனர். உமேஷ் யாதவ் உலக கோப்பை அணியில் இல்லாத போது அவரை தேர்வு செய்துள்ளனர். இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் மத்திய வரிசை வீரர்கள் மற்றும் பவுளர்களை தேர்ந்தெடுபதில் ரோஹித் ஷர்மாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.