Rahul Gandhi-அசாமில் தேசிய ஒற்றுமை நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
ராகுல் நடைபயணம் :
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை நீதிக்கான பயணத்தின் இரண்டாவது நடைபயணம் ‘பாரத் நீதி யாத்திரை’ என்ற பெயரில் மணிப்பூரில் தொடங்கியது.
மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக சார்பில் பல்வேறு இடையூறுகளை கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க : http://KS Azlagiri-”காந்தி, நேதாஜி குறித்து ஆளுநர் கருத்து..”கொந்தளித்த KS அழகிரி!
இந்நிலையில்,நேற்று ஜோராபட்டில் நடைப்பயணம் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது அங்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ,அசாமில் தேசிய ஒற்றுமை நீதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே எழுதிய கடிதம்:
அசாம் காவல்துறையினர் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை, பாஜக தொண்டர்கள் உடைத்து நெருங்க அனுமதிக்கின்றனர்.
அவர்களின் மீறல்களை கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர். ராகுலுக்கும், அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1750019516892086292?s=20
மேலும் அசாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனால் நீங்கள் தலையிட்டு அசாம் முதல்வரும், காவல்துறை டிஜிபியும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.
ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு(Rahul Gandhi) தனிப்பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர், இதில் தலையிட்டு அவருடைய,
யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.