YS Sharmilaஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. இரண்டிற்கும் சேர்த்து வரும் மே 13ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ள 17 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில், ஆந்திர மக்களவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை – மாநிலம் தழுவிய முழு அடைப்பு – ஆந்திராவில் பதற்றம்!
இதே போல் காக்கிநாடாவில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜு, ராஜமுந்திரியில் ஜிடிகு ருத்ர ராஜு, பாபாட்லா தனி தொகுதியில் ஜே.டி.சீலம், கர்னூலில் பி.ஜி.ராம்புள்ளையா யாதவ் ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 15ம் தேதி முதல் ஆந்திராவில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
இன்று வெளியான காங்கிரஸ் பட்டியலில், ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர். இதேபோல் ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார்.