இந்திய கிரிகெட் வீரரான சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்த்த 10 அணிகள் பங்கேற்கின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய முதல் நாள் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதன் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டியின் ,தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான சுப்மன் கில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சுப்மன் கில்லுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், சோதனைக்குப் பின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. சுப்மன் கில்தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல்நிலையில் குறித்து இந்திய அணி நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
மீண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர், அவர் அணியில் சேர்க்கப்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் இளம் பேட்டிங் திறமையான கில் இல்லாதது அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது