இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 752 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக நேற்று சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3420-ஆக அதிகரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கொரோனாவால் கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் இரண்டு நபர்களும், ராஜஸ்தானில் ஒருவரும் என 4 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 5,33,332 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று வெள்ளிக்கிழமை (22.12.23) 640 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.