பாலியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மொபைல் போன் டார்ச் விளக்குகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை மாநிலம் பாலியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டதால் பெண் நோயாளிக்கு மொபைல் போன் டார்ச் மூலம் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.பாலியா மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஜெனரெட்டரை இயக்கி உடனடியாக மின் விநியோகத்தைச் சீரமைக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் ஜெனரேட்டரை பயன்படுத்துவதில்லை என்றும் பல நோயாளிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, ஒரு பெண் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்துப் பரிசோதிப்பதும், மற்றவர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதையும் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் தலைமைப் பொறுப்பாளருமான மருத்துவர் ஆர்.டி.ராம் கூறுகையில், “ஜெனரேட்டருக்கான பேட்டரிகளைப் பெறுவதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் ஜெனரேட்டர் பேட்டரிகளைப் பெறுவதற்கு, சுமார் 20 நிமிடம் தாமதமான இருப்பதாகவும் ஆனால் நேரம் எடுத்ததாகவும் அவர் கூறினார். ஜெனரேட்டரில் பேட்டரி இல்லாமல் இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, “பேட்டரிகள் திருடுபோகும் என்ற அச்சம் எப்போதும் உள்ளது. எனவே, பயன்பாட்டில் இல்லாதபோது அவை அகற்றப்படுகின்றன” என்றார்.
மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் 24 மணி நேரமும் மின்சாரம் தருவதாக பல முதல்வர்கள் உறுதியளித்தும், யாராலும் இதை நிறைவேற்ற முடியவில்லை. மேலும் இது போன்ற மின்வெட்டால் ஏற்படும் பிரச்னைகளால் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நடைபெற்று வருகிறது.மேலும் இதனை உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.