‘இந்தியன் 3’ படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்தியன் 2 படம் ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.
இப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது. அனால், இந்தப் படம் படுதோல்வியை தழுவியது. அனிருத்தின் பின்னணி இசையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
’இந்தியன் 2’ படத்தின் முதலீட்டு அளவில் லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டமே ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து ஓடிடி தளத்திலும் வெளியாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இயக்குநர் ஷங்கரின் திரைப்படம் இந்தளவுக்கு மக்களால் விமர்சிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க : தொழில் வளர்ச்சியில் திமுக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ்!
இந்நிலையில் தான், ‘இந்தியன் 3’ படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் குறித்துவிசாரித்த போது, ‘இந்தியன் 3’ படத்தினை நேரடி ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பது உண்மை தான்.
ஆனால், இன்னும் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை. இன்னும் கமல், ஷங்கர் உள்ளிட்ட அனைவரிடமும் பேசிய பிறகே முடிவு செய்யப்படும்.
எனவே, இப்போதைக்கு நேரடி ஓடிடி வெளியிடும் எண்ணம் லைகா நிறுவனத்துக்கு இல்லை என்று கூறியுள்ளார்களாம்.
மேலும், ‘இந்தியன் 3’ ஓடிடி வெளியீடு குறித்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் சூழலில் படக்குழுவினர் சார்பில் இன்னும் எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.